தள்ளிப்போன ‘டைட்டானிக்’ பட ரிலீஸ்!!

சென்னை:
கலையரசன், ஆனந்தி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘டைட்டானிக்’ எம். ஜானகிராமன் எழுதி இயக்கிய இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது.

பின்னர் 2022ஆம் ஆண்டு படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் சி.வி.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் காளி வெங்கட், மதுமிதா, ஆஷ்னா சவேரி, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ஆனால், பின்னர் அது ஜூலை 18, 2025-க்கு ஒத்திவைக்கப் பட்டது. இதனை தொடர்ந்து ‘டைட்டானிக்’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ‘டைட்டானிக்’ படம் இன்று வெளியாகவில்லை. ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது வருகிற 23-ந்தேதி ‘டைட்டானிக்’ படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் ஜானகிராமன் கூறியதாவது:-

“பல வருட கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் எண்ணற்ற தடைகளைத் தாண்டி, நாங்கள் இறுதியாக அனைத்து தடைகளையும் கடந்து, எங்கள் திரைப்படத்தை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரத் தயாராக உள்ளோம்.

திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் வெளியீட்டை வரும் 23-ம் தேதிக்குத் திட்டமிட்டுள்ளோம்.

ஒரு நல்ல திரைப்படம் எப்போது வந்தாலும், அது பார்வையாளர்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *