பெண்களை மதிங்க..! நிற்காமல் சென்ற மகளிர் இலவசப் பேருந்து.. பெண் சரமாரி கேள்வி!!

ராமேஸ்வரத்தில் மகளிர் இலவசப் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், அடுத்த பேருந்துவர தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பெண் ஒருவர் அங்கிருந்து ஆட்டோவுக்கு ரூ.100 கொடுத்து பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவு மற்றும் சிரமம் குறித்து, பேருந்து நிலையத்தில் டிக்கெட் செக்கரிடம் அவர் கண்ணீர் மல்க விவாதித்தார். மேலும், “இந்த இலவச பேருந்தை நாங்களா கேட்டோம்”

இலவசம் யாரு கேட்டது.. நாங்க கேட்டோமா? என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்து நேற்று காலை பெண்கள் இலவசமாக பயணிக்கும் வெற்றிப் பயண பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

அப்போது பெண் ஒருவர் பேருந்தில் ஏற கைகாட்டியுள்ளார். ஆனால், பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அந்த பெண், அருகில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் ஏறி பேருந்தை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

மேலும், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, அங்குவந்த அந்த பெண், ஏன் தான் கைகாட்டியும் பேருந்தை நிறுத்தவில்லை எனக்கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேருந்தை பின்தொடர்ந்து ஓடிவந்தும் பேருந்தை நிறுத்தாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இலவசப் பயணம் உங்களிடம் யார் கேட்டது?

டிக்கெட்டிற்கு பணம் வேண்டுமானால் வாங்கிக்கொள் ளுங்கள். இலவச பேருந்து பெண்களுக்கு கொடுத்ததால், எங்களை அலட்சியமாக நினைக்கிறாங்க. கூலி வேலை செய்துவிட்டு, பஸுக்கு பின்னாடி ஓடி வரேன். பெண்களை மதித்து நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டாமா?” எனவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

அவரை அதிகாரிகள் சமாதானம் செய்ய முயற்சித்த நிலையில், மனவேதனையுடன் அழுதபடியே அந்தப் பெண்மணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *