தன்​னம்​பிக்கை ஒன்று இருந்​தால்​போதும், வாழ்க்​கை​யில் நாம் வெற்றி பெறலாம் – மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுரை!!

சென்னை:
நாம் தன்​னம்​பிக்​கையுடன் இருந்​தால் வாழ்​வில் வெற்றி பெறலாம் என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​யில் பயிலும் மாணவர்​களுக்கு உயர்​கல்வி வழிகாட்​டித் திட்​டத்​தின்​கீழ் களப்​பயணம் உட்​பட பல்​வேறு செயல்​பாடுகள் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

அதன் ஒரு பகுதி​யாக மாணவர்​களுக்​கான கல்​லூரி களப் பயணத்​தின் தொடக்க விழா சென்னை கிண்​டி​யில் உள்ள அண்ணா பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் தலைமை தாங்​கினார்.

இதில் பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் இன்​னசென்ட் திவ்யா, அரசு மாதி​ரிப் பள்​ளி​கள் உறுப்​பினர் செயலர் சுதன், அண்ணா பல்​கலை. பதிவாளர் குமரேசன் உட்​பட பலர் கலந்​து​கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் ராஜ்மோகன் பேசிய​தாவது:

நான் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின்​னர் அடுத்து என்ன படிக்​கலாம் என்று தவித்​த​போது போது​மான விழிப்​புணர்வு இல்லை. வழிகாட்​டுதலும் கிடைக்​க​வில்லை.

எனது தந்தை, பிஏ தமிழ், விசுவல் கம்​யூனிகேஷன் என நிறைய படிப்​பு​களை கூறினார். நீ தப்​பித்​தவறிக்​கூட பொறி​யியல் மட்​டும் சேர்ந்​து​விடாதே எனவும் சொன்​னார்.

இப்​படி என்னை குறைத்து எடைபோட்​டுவிட்​டார்​களே என நான் நினைத்து பொறி​யியலில் சேர்ந்து படித்​தேன்.

அதேநேரம் சேர்ந்த 4 நாட்​களி​லேயே இந்த ஜென்​மத்​தில் நான் பொறி​யாளராவது கடினம் என்​பதை உணர்ந்​தேன். ஆனாலும், விடா​முயற்​சி​யுடன் படித்து முடித்​தேன்.

தன்​னம்​பிக்கை ஒன்று இருந்​தால்​போதும், வாழ்க்​கை​யில் நாம் வெற்றி பெறலாம்.

நமது கனவு​களுக்கு கொஞ்​சம் உழைப்​பையும், ஈடு​பாட்​டையும், தன்​னம்​பிக்​கையையும் சேர்த்து கொடுத்​தால் வெற்​றி​பெற முடியும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *