இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் இருந்து பாஜக எம்பியாக கங்கனா ரனாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எம்பியான பிறகு டெல்லி செல்ல சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த பாஜக எம்பி நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்ததால் அறைந்ததாக விசாரணையில் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் சேரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.
அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.. என்று குறிப்பிட்டுள்ளார்.