தமிழ் சினிமாவில் செல்லமாக ‘தல’ என்று அழைக்கபடும் நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படம் நடித்து வருகிறார் அதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் நேரங்களை செலவழிக்க எண்ணி அவரின் கடைகுட்டி சிங்கமான செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித். அவர்களின் மனைவி ஷாலினி மூத்த மகளான அனுஷ்காவுடன் மிகவும் மகிழ்ச்சியாக பிறந்தாநாளை கொண்டாடியுள்ளார்.
ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கும் நபர் என்பதால். அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.
அதன் புகை படத்தை ஷாலினி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வர வேற்ப்ப்பை பெற்று இருக்கிறது. சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.