தூத்துக்குடி:
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ உள்ளிட்ட சில நிர்வாகிகள் ஏற்கெனவே தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள் பொன்னரசி, தனது கணவர் அசோக்குடன் தவெகவில் இணைந்துள்ளார்.
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக செயலாளருமான ஸ்ரீநாத்தை சென்னையில் சந்தித்து, அவரது முன்னிலையில் இருவரும் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.