பள்ளிகளில் இனி உடற்கல்வி வகுப்பை ஆசிரியர்கள் ரத்து செய்ய கூடாது – மீறி ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப் பலாம்;அமைச்சர் ராஜ்மோகன்!!

காரைக்குடி:
“பள்ளிகளில் இனி உடற்கல்வி வகுப்பை ஆசிரியர்கள் ரத்து செய்ய கூடாது. மீறி ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாணவர் செயற்களம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு பயிலரங்கம் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்எம்எம்எஸ்) பயிற்சி புத்தத்தை வெளியிட்டு பேசியதாவது:

பள்ளிகளில் வாரத்தில் 2 பாடவேளைகள் என்று இருந்த உடற்கல்வி வகுப்பு இனி 5 நாட்களுக்கும் இருக்கும். உடற்கல்வி வகுப்பை ஆசிரியர்கள் இனி ரத்து செய்ய கூடாது.

யாரேனும் உடற்கல்வி வகுப்பை ரத்து செய்துவிட்டு, வேறு பாடங்களை படிக்கச் சொன்னால், எனக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம். கணிதம், அறிவியல் பாடங்களை போன்று உடற்கல்வி பாடமும் இருக்க வேண்டும்.

சில பாடங்கள் தங்களுக்கு வரவில்லை என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.

தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற்று விடலாம். பெற்றோரை திருப்திப்படுத்த துறையை தேர்வு செய்ய வேண்டாம். பெற்றோர் யாரும் இனி குழந்தைகளை திட்ட கூடாது. இது அமைச்சரின் உத்தரவு. குழந்தைகளை ஒப்பிட்டு பேசக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு, அழகப்பா பல்கலை., துணைவேந்தர் (பொ) ஜெயகாந்தன், முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர்கள் இருவரும் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுக்கு மாணவர்களுடன் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *