நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ.6000-க்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது!!

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ.6000-க்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது!!

நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி ரூ.6000-க்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டங்களில் ரூ.6,000 வழங்கப்படுகிறது.

Leave a Reply