தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசை நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று வாக்களித்துள்ள அரசியல் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.
சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், கொளத்தூர் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு
சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட கண்டனூர் வாக்குச்சாவடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார்
திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்களித்தார்
கரூர் மக்களவை தொகுதி ஊத்துப் பட்டியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்
தூத்துக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அமைச்சர் கீதா ஜீவன்
சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்
பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் வாக்களித்தனர்
திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார்

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கணேஷ் லேஅவுட் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார்