”Breaking News” மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ் நாட்டில் 24.37%வாக்குகள் பதிவு!!

மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37%வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .

21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

✦ கடலூர் – 24.72%

✦ தேனி – 25.75%

✦ திருச்சி – 22.77%

✦ மயிலாடுதுறை – 23.01%

✦ சேலம் – 28.57%

✦ கிருஷ்ணகிரி – 27.58%

✦ வேலூர் – 23.46%

✦ சிதம்பரம்‌ – 23.46 %

✦ கரூர் – 28.88 %

✦ ராமநாதபுரம் – 25:92%

✦ ஈரோடு – 28. 29%

✦ ஆரணி – 26.3%

✦ மதுரை – 22.5%

✦ நீலகிரி – 21.69%

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *