வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றிய 108 வயது பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி !!

108 வயதான பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .

21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசை நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டியில் 108 வயதிலும் வரிசையில் நின்று பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி ஜனநாயக கடமையை ஆற்றினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *