முன்னாள் முதலமைச்சருமான ஜானகி அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்!!

முன்னாள் முதலமைச்சருமான ஜானகி அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்!!

எம்.ஜி.ஆரின் துணைவியாரும், முன்னாள் முதலமைச்சருமான ஜானகி அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள்19 (vii) மற்றும் 25(ii)-ன்படி, இன்று காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சியின் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தில், கழக நிறுவனத் தலைவர், ‘பொன்மனச் செம்மல்’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியாரும், முன்னாள் முதலமைச்சருமான, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி வி.என். ஜானகி அம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சிறப்பான முறையில் எழுச்சியோடு கொண்டாடுவது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

முன்மொழிபவர்
: மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் கழகப் பொதுச் செயலாளர்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்
வழிமொழிபவர்கள்

: அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply