நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக் கழகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் !!

நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக் கழகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் !!

தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரம் உடல் அங்கு வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரமேலதா, சுதீஷ் ஆகியோர் கையைப்பிடித்து ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை கோயம்போட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமைக் கழகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply