2,000 இருக்கைகளும், விவிஐபி-கள் அமர தனியாக 100 இருக்கைகளும் போடப்பட்டுள்ள தீவுத்திடல்!!

2,000 இருக்கைகளும், விவிஐபி-கள் அமர தனியாக 100 இருக்கைகளும் போடப்பட்டுள்ள தீவுத்திடல்!!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தற்போது தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள தீவுத்திடலில் விஐபி-கள், திரைப் பிரபலங்கள், அமைச்சர்கள் வருவதற்கு தனிப்பாதையும், தொண்டர்கள் ரசிகர்கள் விரைவாக அஞ்சலி செலுத்துவதற்காக தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

கட்சினர் அமரக்கூடிய வகையில் 2,000 இருக்கைகளும், விவிஐபி-கள் அமர தனியாக 100 இருக்கைகளும் போடப்பட்டுள்ளன; தீவுத்திடலை சுற்றி 15 இடங்களில் நடமாடும் கழிவறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply