மழைக்காலங்களில் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்க கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்…

மழைக்காலங்களில் பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்க கைகளை சுத்தமாக பராமரிப்பதும் முக்கியம். சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் மட்டுமே கை கழுவும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்போதும் கைகளை நன்றாக தேய்த்து கழுவினால் மட்டும் போதாது. ‘ஹேண்ட் வாஷ்’ அல்லது சோப் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.

துணி துவைப்பதற்கு பயன்படுத்தும் சோப்பை கொண்டு கைகளை கழுவக்கூடாது. கடினத்தன்மை கொண்ட அந்த சோப் கைகளை விரைவாக உலர்வடைய செய்துவிடும். மென்மையான சோப் பயன்படுத்தியே கைகளை கழுவ வேண்டும்.

சருமத்தை போலவே கைகளும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மையை கொண்டிருக்க வேண்டும். எந்த வேலை செய்து முடித்தாலும் உடனே கைகளை கழுவ வேண்டும். அதுபோல் கைகளை கழுவியதும் டவல் கொண்டு துடைத்து உலர வைத்துவிட வேண்டும்.

அப்படி செய்வது கைகளை மென்மையாக்குவதோடு, சுருக்கம் போன்ற வயதான தோற்ற பொலிவு ஏற்படுவதை தவிர்க்கும்.

வெளியிடங்களுக்கு செல்லும்போது முகத்திற்கு சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது போல் கைகளுக்கும் பூசிக்கொள்வது பொலிவு தரும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கைகளில் எண்ணெய் தடவலாம். அது தசைகள் உலர்வடையாமல் பார்த்துக்கொள்ளும், கைகளுக்கு மிருதுத்தன்மையையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

விரைவாகவே கைகளில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும்போது நோய்த்தொற்றுகளும் நெருங்காது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *