தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம் – வானதி சீனிவாசன்!!

கோவை:
கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்ப்புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் நன்றி கூறினார். தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த பணத்தை மாணவர்கள் போதை பழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பான திட்டம் தான்.

கோவை விமான நிலையம் மற்றும் எனது தொகுதிக்கு உட்பட்ட டவுன்ஹால், காந்திபுரம் பகுதியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் உள்பட தொகுதி சார்ந்த உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் வந்து பாருங்கள் என்று சொன்னார்.

அதோடு வருகிற 18-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் கட்சியில் சொல்கிறேன் என்று தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *