அரசு முறை பயணமாக நாளை அமெரிக்கா புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ( ஆகஸ்ட் 27) அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தின் மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலராக (ஒரு லட்சம் கோடியாக ) உயர்த்தப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ல் முதலீடுகள் மற்றும் முதலீடுகளுக்கான தொடக்கம் என சேர்த்து மொத்தமாக 68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார இலக்கை எட்டுவதன் ஒரு பகுதியாக சுமார் 17 நாட்கள் பயண்மாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். வருகிற 28ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திக்கிறார்.

தொடர்ந்து 29ஆம் தேதி முதலீட்டாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஆக. 31ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார்.

அங்கு தொடர்ந்து 10 நாட்கள் தங்கி பல்வேறு முக்கிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி சிகாகோவில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *