நுகர்வோர் நலத்தை பாதுகாக்கவும் தன் விநியோகஸ்தர்களை ஆதரிக்கவும் வலிமையான விழிப்புணர்வு பிரச்சாரத் தை தொடங்கிய ஆம்வே!!

சேலம்,
நுகர்வோர், விநியோகஸ்தர் ஆகிய இருதரப்பாரின் நலனையும் பாதுகாப்பதில் தன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்கும் முன்னணிநிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா தன் தயாரிப்புகளின் அங்கீகரிக்கப்படாத விற்பனை குறித்து பங்குதாரர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு வலிமையான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டாத தயாரிப்புகளை விற்பதில் அடங்கியுள்ள ஆபத்துகளைப் பற்றி பங்குதாரர்களுக்குக் கற்பித்தல், விநியோகச் சங்கிலிகண்காணிப்பை மேம்படுத்துதல், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு இலக்கு நிர்ணயித்து ஆதரவு அளிக்கும் அமர்வுகளை நடத்தி ஆதாரங்களை வழங்குதல் ஆகியவை இந்த விரிவான உத்தியில் உள்ளடங்கியுள்ளது.

ஆம்வேயின் விநியோகஸ்தர்களிடம் இருந்து அல்லது அதிகாரப்பூர்வ ஆம்வே இணைய தளத்தின் மூலம் மட்டுமே வாங்கும் போது உண்மையான ஆம்வே தயாரிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பிற்கான ஆம்வேயின் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை வலுப்படுத்துகிறது.

ஆம்வே இந்தியா நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு நாணயம்ஆகியவற்றின் மேல் அதற்கு இருக்கும் உறுதிப்பாட்டின் காரணமாகப் போலியான மற்றும் தீங்கு விளைவிக்கும்பொருட்களிடம் இருந்து தனது நுகர்வோரைப் பாதுகாக்க அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிவருகிறது.

ஒவ்வொரு பொருளும் மிக உயர்ந்த தரத்தோடு நுகர்வோரை சென்று அடைவதை உறுதி செய்வதற்காக ஆம்வேஇந்தியா செயல்படுத்தும் கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள்புறக்கணிக்கின்றனர்.

அங்கீகரிக்கப்படாத விற்பனையை அனுமதிக்கவே முடியாது என்ற கொள்கையை ஆம்வே நிறுவனம்பின்பற்றுகிறது.

இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத விற்பனையில் ஈடுபட்டுள்ள விநியோகஸ்தர்களை இடைநீக்கம் செய்வதுஅல்லது நீக்குவது போன்ற தெளிவான வழிகாட்டுதல்களையும் நடவடிக்கைகளையும் உறுதிசெய்வதோடு ஆம்வேயால் அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் மூலம் மட்டுமே உண்மையான ஆம்வே தயாரிப்புகள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குகிறது.

ஆம்வே இந்தியா தனது தயாரிப்புகளை அதன் விநியோகஸ்தர்கள் மூலம் சமரசமற்ற தரம் மற்றும்நம்பகத்தன்மையை உறுதிசெய்கிறது.

கடைகள், பல்பொருள் அங்காடிகள், தரகர்கள், டீலர்கள் அல்லது வேறு ஏதாவது மூன்றாம் தரப்பு ஈ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்வதை நிறுவனம் கண்டிப்பாகத் தடைசெய்கிறது மேலும் இவ்வாறு விற்கப்படும் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை அல்லது தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆம்வே தயாரிப்புகளும் அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை உறுதிப்படுத்த, ‘ஆம்வே நேரடி விற்பனை பார்ட்னர்கள் மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன’ என்று லேபிள் இடப்பட்டுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *