கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 31-ந் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சாய் பல்லவி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பே வெளிநாட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நடனத்திற்கு கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடினால் சரியாக இருக்கும் என நினைத்து ஆடியிருந்தேன்.
அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கருத்துக்களை போட ஆரம்பித்துவிட்டனர். இதைத்தொடர்ந்து இனி இதுபோன்று செய்யக்கூடாது என முடிவு செய்தேன். உடம்பைக் காட்டிதான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது.
குடும்ப பாங்கான தோற்றத்திலேயே ரசிகர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது அதுவே எனக்கு போதும். என் நடிப்பு திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் படங்களில் நடித்துவிட்டு போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.