பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக புகழ்பெற்ற கோயிலாக விளங்குகிறது.
இங்கு திருவிழா நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் கூட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
குறிப்பாக பிரம்மோற்சவ நாட்களிலும், சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் சிலர் உண்டியலில் காணிக்கை மற்றும் முடிக் காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தி செல்கின்றனர்.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். மனைவி சவுமியா அன்புமணி மற்றும் மகளுடன் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.