மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை மக்கள் நலப்பணிகளுடன் விமரிசையாக கொண்டாட ஏற்பாடு!!

சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை மக்கள் நலப்பணிகளுடன் விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்ச் சமூகத்துக்கே பெருமை சேர்க்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை நவ.7 தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வியாழன் காலை 9 மணியிலிருந்து பல்வேறு மக்கள் நலப்பணிகளுடன் கூடிய சிறப்பு விழாவாக பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவில் அமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.

அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தங்களின் மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி, மநீம தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை கோலாகலமாகவும், மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டும், விமரிசையாகக் கொண்டாட உள்ளனர்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *