லக்னோ;
லக்னோவில் வசித்து வந்தவர் ஜவுளி தொழிலதிபர் ஷோ பித் (48). இவருடையஅவரது மனைவி (45) சுசிதா மற்றும் அவர்களது மகள் கியாதி (16) . ஷோபித் ராஜாஜிபுரத்தில் ஒரு துணிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தொழிலதிபர் ஷோபித் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். காலையில், மூவரின் உடல்களும் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டன.
அவர்களின் வாயில் இருந்து நுரை வந்துள்ளது. இதனால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களின் சடலங்களுக்கு அருகிலேயே ஒரு தற்கொலைக் குறிப்பும் கிடந் துள்ளது.
அதில் கடன் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவம் குறித்து தகவல்களை சேகரித்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.