வரும் டிச.15ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.