நாகார்ஜுனா இளைய மகனுக்கு நிச்சயதார்த்தம்…….

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நாகார்ஜுனா. இவரது முதல் மனைவி லட்சுமி. அவரை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நாக சைதன்யா [38 வயது]. இரண்டாவது மனைவியான அமலாவுக்கு பிறந்தவர் அகில் அக்கினேனி [30 வயது]. இருவருமே தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக தடம் பதித்துள்ளனர்.

அண்ணன் நாக சைதன்யாவுக்கு நடிகை சமந்தாவுடன் திருமணம் ஆகி பின் விவாகரத்து ஆனது. தற்போது நடிகை ஷோபித்தா துலிப்பா – வை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் அண்ணன் நாக சைதன்யா.

இந்நிலையில் நாக சைத்னயா திருமண வேலைகளுக்கு மத்தியில் தம்பி அகில் அக்கினேனிக்கும் நேற்று சிம்பிளாக நிச்சயத்தர்தம் செய்து வைத்துள்ளார் அப்பா நாகார்ஜுனா. அதன்படி அகில் நீண்ட காலமாக காதலித்து வந்த ஜைனப் ரவ்ஜீ என்ற பெண்ணை கரம் பிடிக்கிறார்.

இஸ்லாமியப் பெண்ணான ஜைனப், மும்பை தொழிலதிபரின் மகள் ஆவார். ஓவியக்கலைஞரான ஜைனப்பும், அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயமே நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *