சி.எஸ்.கே. தீமில் ரெடியான விமானம் – Ethiad ஏர்வேஸ் வெளியிட்ட வீடியோ!!

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெக ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதன்மூலம் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

தமிழகத்தை மையமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயணம் செய்ய ஏதுவாக etihad airways நிறுவனம் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த விமானத்தில் சிஎஸ்கே லோகோவுடன் மஞ்சள் கலரில் தயார் செய்யப்பட்டுள்ளது. இனி சிஎஸ்கே வீரர்கள் அடுத்த மாநிலத்திற்கு செல்ல இந்த விமானத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணி வீரர்கள்:-

  1. எம் எஸ் டோனி 2. ருதுராஜ் கெய்க்வாட் 3. பத்திரனா 4. சிவம் துபே 5. ஜடேஜா 6. டெவோன் கான்வே 7. ராகுல் திரிபாதி 8. ரச்சின் ரவீந்திரா 9. ரவிச்சந்திரன் அஸ்வின் 10. கலீல் அகமது 11. நூர் அகமது 12. விஜய் சங்கர் 13. சாம் கர்ரன் 14. ஷேக் ரஷீத் 15. அன்ஷுல் கம்போஜ் 16. முகேஷ் சவுத்ரி 17. தீபக் ஹூடா 18. குர்ஜப்னீத் சிங் 19. நாதன் எல்லிஸ் 20. ஜேமி ஓவர்டன் 21. கமலேஷ் நாகர்கோடி
  2. ராமகிருஷ்ண கோஷ் 23. ஷ்ரேயாஸ் கோபால் 24. வான்ஷ் பேடி 25. ஆண்ட்ரே சித்தார்த்
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *