10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா – தாய்லாந்து இன்று மோதல்!!

மஸ்கட்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது. டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

இதில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று தாய்லாந்தை சந்திக்கிறது. போட்டியை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டும்.

அதேநேரத்தில் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவிடம் வீழ்ந்த தாய்லாந்து அணி வெற்றி கணக்கை தொடங்குவதற்கு கடுமையாக போராடும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *