மு.க.ஸ்டாலின் போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி எனக்கு இல்லாதது வருத்தமாக இருக்கிறது …  பாமக நிறுவனர் இராமதாசு…

சென்னை: 

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக அதானி குழுமம் மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், “அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உள்ள பங்கு குறித்தும், அதானியுடனான ரகசிய சந்திப்பு குறித்து முதலமைச்சர்ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் இராமதாசு அறிவிக்கை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியதை குறித்தும் கேட்கப்பட்ட செய்தியாளர்களிடத்தில் பேசிய முதலமைச்சர்,

“ஏற்கனவே துறை சார்ந்த அமைச்சரே அதுகுறித்து பேசிவிட்டார். அதை நீங்கள் ட்விஸ்ட் பன்னிட்டு இருக்க வேண்டாம். பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினந்தோறும் ஏதாவது ஒரு அறிக்கை விட்டு கொண்டே இருப்பார் . அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டே இருக்க அவசியம் இல்லை,” என்று பதிலளித்திருந்தார்.

அன்புமணி இராமதாஸ் கண்டனம்:

 முதலமைச்சரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி இராமதாஸ்,”இப்படி ஒரு முதலமைச்சரை பெறுவதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ?  இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார் . மேலும், மு.க.ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் (பாமக) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், (நவ.27) புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பாமக நிறுவனர் இராமதாசு, முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு,

அவரைபோல் பிரகாசமான அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை. நான் என்ன செய்ய முடியும், எனக்கு வருத்தமாக இருக்கிறது” என பதில் அளித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *