வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் 2வது கட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடசென்னை இனி வளர்ந்த சென்னை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மாநகரின் எல்லை எத்தனைதான் பரந்து விரிந்தாலும் ‘ஒரிஜினல்’ சென்னை நம் #வடசென்னை-தான்.
அந்த வடசென்னையின் வளர்ச்சிக்கான சிறப்பு அக்கறையுடன் ரூ. 6,309 கோடி எனும் பெரும் நிதி ஒதுக்கீட்டுடன் நமது #DravidianModel அரசு அறிவித்த வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை இன்று தொடங்கி வைத்தேன்.
முதற்கட்டத்தில் தொடக்கி வைத்த 87 பணிகளில் 29 பணிகளை எட்டே மாதங்களில் நிறைவேற்றி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தேன். வடசென்னை இனி வளர்ந்த சென்னை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.