ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 06ம் தேதி சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெற்று கொண்டிருப் பதாக கூறினார். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும் புகழ்ந்து பேசினார்.
இது திமுக-விசிக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதாக 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.