கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான பாட்ஷா உடல்நலக்குறைவால் மரணம்!!

கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான பாட்ஷா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

கோவையில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தனர்.

200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏஸ்.ஏ. பாஷா சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். ஏஸ்.ஏ. பாஷா கடந்த 3 மாதங்களுக்கு முன் பிணையில் வெளிவந்தார் என்பது குறிப்பிடதக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *