தருமபுரி :
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகிய சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கூறி கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகிய சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.