சிறுமியை இரக்கமின்றி அடித்து உதைத்த அத்தை – பதற வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் !!

சிறுமியை இரக்கமின்றி அடித்து, திட்டுவது போன்ற கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒரு கொடுமைக்கார அத்தை தனது 13 வயது சிறுமி (அண்ணன் மகள்) மனிதாபிமானமற்ற முறையில் அடித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ரத்லமில் உள்ள தீன்தயாள் நகரில் வசிக்கும் பூஜா என அடையாளம் காணப்பட்டார்.

சிறுமியின் தாய்வழி தாத்தா கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தகவலின்படி, சிறுமியின் பெற்றோர் விவாகரத்து பெற்றுள்ளனர். மேலும் சிறுமி தனது தந்தையின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தந்தையின் சகோதரியான பூஜா கோபமடைந்து சிறுமியை பிடித்து அடிக்கத் தொடங்கினார்.

அந்த வீடியோவில், அந்த பெண், சிறுமியை தனது கால்களுக்கு இடையில் பிடித்து, இரு கைகளாலும் அடித்து, என்னை எதிர்த்து பதில் சொல்ல தைரியமா?” (அப் போலேகி, படா அப் கரேகி)

தன்னை காப்பாற்றுமாறு பாட்டியிடம் சிறுமி கெஞ்சினாலும், அந்தப் பெண் தொடர்ந்து அவரைத் தாக்கியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பூஜாவிடம் சிறுமியை விட்டுவிடுமாறு அவரது மாமியார் கோரிக்கை விடுத்தும் கேட்காததால், அவர் தனது செல்போனில் சம்பவத்தை பதிவு செய்ய தொடங்கினார்.

இதைப் பார்த்த பூஜா பயமின்றி தன் மாமியாரிடம், பதிவு செய்வதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை (கர் லோ ரெக்கார்டு, முஜே கோய் திக்கத் நஹி) என்று கூறினார்.

சிறுமி வலியால் கதறிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளுடைய அத்தை இரக்கமின்றி அவளை அடித்தார்.

சிறுமியின் பாட்டி அந்த வீடியோவை அவரது தாயாருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய்வழி தாத்தா, அவரது அத்தை மீது போலீசில் புகார் அளித்தார். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மாமியார் மற்றும் கணவரின் துன்புறுத்தல் காரணமாக சிறுமியின் தாய் ஏற்கனவே தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும் ஒரு பெண் தன் தாயுடன் தங்குவாள், மற்றவள் தந்தையுடன் தங்குவது என பரஸ்பரம் முடிவு செய்யப் பட்டதாகவும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *