இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி !!

ஹாமில்டன்
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 347 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 35.4 ஓவர்களில் 143 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

இதனையடுத்து ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 204 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 101.4 ஓவர்களில் 453 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 234 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெஸ்டில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் சாதனையை அந்த அணி சமன் செய்தது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு கிரிஸ்ட்சர்ச்சில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வில்லியம்சன், ஜேக்கப் பெத்தேல் பந்து வீச்சில் சிக்சர் விளாசி தனது 33-வது சதத்தை 137 பந்துகளில் பூர்த்தி செய்தார். அவர் இந்த மைதானத்தில் அடித்த 7-வது சதம் இதுவாகும். இதில் 5 சதங்களை தொடர்ச்சியாக எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு மைதானத்தில் தொடர்ச்சியாக 5 டெஸ்டில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *