”சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்” – ஜி.வி.பிரகாஷ் ஆவேசம்!!

சென்னை:
அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில், “அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நான் உறுதுணையாக நிற்கிறேன்.

நம் பெண்களுக்கு அதிக அதிகாரம்… சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும், அவனைப் போன்றவர்களை வெளியில் விடக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *