ஜல்லிக்கட்டில் உயிரிழந்த நவீன்குமாருக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டம்!!

மதுரை:
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.இதில், மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் (23) என்பவர் மாடுபிடி வீரராக களம் இறங்கினார்.

போட்டியில் காளை முட்டியதில் அவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த நவீன்குமாருக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று நிறைவுபெற்ற நிலையில் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் உடலை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நெருக்கடியையும், சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *