சென்னை:
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்பட இடப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், DD Next Level படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வருகிற மே மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.