தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல உடனே அனுமதி – எடப்பாடி அதிரடி…

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்ற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளித்து இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் . பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் வரும் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts