சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

விழுப்புரம்;
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து வருகிறார்.

அதேபோல் இன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெறார்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் `ரோடு ஷோ’ நடத்தினார்.

இதனை தொடர்ந்து வழுதரெட்டியில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகளை போற்றும் வகையில், ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடனான நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *