உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் – இசைஞானி இளையராஜா !!

சென்னை ;
லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக லண்டன் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லோருக்கும் வணக்கம்.

புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக இசை கலைஞர்களும் உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா லண்டன் அவர்கள் வாசித்து ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்து இந்த இசையை வெளியிட இருக்கிறோம்.

வருகிற 8-ந்தேதி அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. இது எனது பெருமை அல்ல.

நாட்டின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா. நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *