உலர் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

உலர் பழங்கள் சிறிய அளவிலானவை ஆனால் பெரும் ஊட்டச்சத்துகளைக் கொண்டவை. பெரும்பாலானவர்கள் பழங்களை தவிர்க்கவும், சிறந்த சுவையுடன் கூடிய உலர் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு பசியை கட்டுப்படுத்தி, சக்தி தரும் உணவுகளை விரும்புபவர்கள் உலர் பழங்களை தேர்வு செய்யலாம்.

ஏனெனில் உலர் பழங்களில் சோடியம், கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருக்கும், ஆனால் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.

உலர் பழங்களை எதற்கு சாப்பிட வேண்டும் என்பதைப் பார்க்கலாம். உதாரணமாக, பிஸ்தா, உலர் பழங்களை தொடர்ந்து உண்பவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வு ஆகும். இது பசியை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிரப்பல் உணர்வை அளிக்கும்.

அதிலும், ஒலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடென்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம், துத்தநாகம், பாலிபீனாலிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

உடல் எடை குறைக்கும் முயற்சிகளை விரைவுபடுத்த விரும்பினால், தினமும் பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்பு, உலர் திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிக்க விரும்பினால், முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுவது சிறந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *