முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை போலவே, அதன் கீரையிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல அரிய பலன்களை அளிக்கிறது.
முள்ளங்கி கீரையில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிடுவது இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து, உடல் பலவீனத்தை நீக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. இது மலச்சிக்கலை தடுப்பதுடன், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
முள்ளங்கி கீரை இயற்கையான சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், இது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அதிகப்படியான உப்பை கழுவி வெளியேற்றவும், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
தொடர்ந்து முள்ளங்கிக் கீரையை உணவில் சேர்ப்பது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.