சென்னை
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஜனவரி 30ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் வீட்டு நாய்களுக்கு உடலில் ‘சிப்’ பொருத்தவும், 4 ஆயிரம் தெரு நாய்களின் உடலில் அரிசி வடிவ சிப்பும் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்ய தொடங்கியுள்ளது.
வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஜனவரி 30ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ”சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
நாய்களின் உடலில் மைக்ரோ சிப்கள் தோலுக்கு அடியில், பொதுவாக தோள்பட்டை பகுதியில் ஊசி மூலமாகச் செலுத்தப்படும்.
இந்த சிப் ஒரு அரிசி பருக்கையின் அளவில் மட்டுமே இருக்கும். இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும்.
அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை என்ற ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் (புவி குறியீடு) விவரமும், வீட்டு நாய்களில் அவற்றின் உரிமையாளர் விவரங்களும் இருக்கும். உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும். RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சிப்களில் நாயின் விவரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும். இதன் மூலம் நாய்களின் தடுப்பூசி விவரங்களைக் கண்காணிக்க முடியும். வருடாந்திர தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டலை உரிமையாளர்களுக்கு அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மே மாதம் முதல் இதை செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் கால்நடைத்துறை முடிவு செய்துள்ளது.