சென்னை:
பாரதி ராஜா மகன் மனோஜ் பாரதி மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதி ராஜாவின் புதல்வரும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
திரையுலகில் சாதனைகளை படைத்திருக்க வேண்டிய மனோஜ் இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாசம் காட்டி வளர்த்த மகவை இழந்து தவிப்பது பெரும் சோகமாகும். மகனை இழந்து வாடும் இயக்குநர் பாரதி ராஜாவுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.