இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல்….

சென்னை:
பாரதி ராஜா மகன் மனோஜ் பாரதி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இயக்குநர் பாரதி ராஜா மகன் மனோஜ் பாரதி (48) இன்று (25.03.2025) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான மனோஜ் பாரதி தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. முதுமை காலத்தில் கலங்கி நிற்கும் பாரதிராஜா ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத துயரமாகும்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பதினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.” எனத் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *