சென்னை ;
தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலத்தை தொடர்ந்து இந்தியிலும் வானிலை முன்னறிவிப்பு வெளியிட தொடங்கிய சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சென்னை வானிலை ஆய்வு மையம் நாள்தோறும் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி வந்தது. இந்த நிலையில், தமிழ், ஆங்கிலத்தை தொடர்ந்து இந்தியிலும் வானிலை முன்னறிவிப்பு வெளியிட தொடங்கிய சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இதுபோல் இந்தியில் அறிக்கை வெளியிட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆங்கிலத்திலும், ஆந்திராவில் ஆங்கிலம், தெலுங்கிலும் மட்டுமே வானிலை மைய அறிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்தை தொடர்ந்து இந்தியிலும் வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பி வருவது குறிப்பிடதக்கது.