சென்னை ;
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று ஆஜராகினார்.
விசாரணை நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதாகரன், கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்சி. பிசிஐடி போலீசார் என்னிடம் 40 கேள்விகள் கேட்டனர்.
எனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவித்துள்ளேன். மீண்டும் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கூறவில்லை.