சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ். தோனி எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார்.
அப்போது பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது. இதனை நீண்ட நேரம் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியாக அவுட் கொடுத்தார்.
தோனி ரன்களை குவிக்காமல் உடனடியாக ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.