சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி தொடர்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 103 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த மோசமான தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான். நாம் அடிப்படைகளுக்குத் திரும்ப வேண்டும், நாம் எங்கு தடுமாறுகிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சவாலை நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தில் போதுமான ரன்னை எடுக்கவில்லை.
பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள். அவர்கள் சோர்வடைய தேவையில்லை.
தொடக்கத்திலேயே விக்கெட் சரிவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அதை நிவர்த்தி செய்ய முடியவில்லை. இந்த தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
மேலும் விரக்தி அடையாமல் இருப்பது முக்கியம். போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன்.
இவ்வாறு தோனி கூறி உள்ளார்.