சென்னை;
தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி. சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாய் மீண்டும் அறிவித்தார் தமிழர்களின் தங்கத் தலைவி அம்மா.
இனி எத்தனை நாளை வந்தாலும் சித்திரை ஒன்றே என்றும் தமிழர்களின் புத்தாண்டு. தமிழ் மக்களின் நலன் காத்த தாயின் ஆணையின்படி சட்ட பேரவை தலைவராக எனது தலைமையில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழா. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணியை பழனிசாமிதான் அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், அமித்ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி சுதந்திரமாக முடிவெடுக்கிறார் என்பதை எப்படி நம்ப முடியும்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, அதிக வாக்குகளை பெற்றதாக தங்களை முன்னிறுத்த பாஜக முயற்சிக்கிறது. மேலும், அதிமுகவை வீழ்த்தி, கரைந்து போகச் செய்யும் யுக்தியையும் பாஜக கையாள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.