திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும்; இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கும்பகோணத்தில் பேட்டி!!

சென்னை;
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுடன், தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வருகிறோம்.

அவர் தேசியத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அல்ல. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஏப். 14-ம் தேதி (இன்று) மாலை மாலை அணிவிக்க உள்ளோம். பெண்களை தவறாகப் பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வேண்டும்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மதப் பிரச்சாரம் செய்தவர்களை கைது செய்யாமல், நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை தமிழக பாஜகவின் அடையாளம். புதிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட்டு, திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *